The India Institute research team who designed and evaluated the programme, the tutors who delivered it in classrooms, and the supporter whose generosity made Phase 1 possible.
Research team
India Institute
TNCT is a project of India Institute, a national research and policy organisation. The research team is the same as India Institute's core team. Full profiles are on the India Institute website.
Joined the project following the completion of Phase 1. Co-leads the planning and execution of Phase 2. Contributing to the analysis of select datasets and the writing of a separate research product alongside the main results report.
Led ground-level project implementation and served as the liaison between school officials and teachers. Coordinated administrative data and pre-baseline data collection, and acted as a classroom co-observer during the intervention.
Twelve trained external tutors delivered the TNCT curriculum across the 19 treatment schools, one hour per week. All tutors completed a structured training programme in critical thinking pedagogy before the intervention began. Profiles below are in Tamil, the language in which they were written.
A. Mahalakshmi
BA, B.Ed
CT Tutor | Thinking Notes
மகாலட்சுமி அரிகிருஷ்ணன், இவர் இளங்கலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்ச்சி (BA and B.Ed) முடித்தவர். தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டி தான் ஆசிரியர் பயிற்சி முடித்து இந்த ஆசிரியர் பணிக்கு வந்தார். ஆனாலும் இவரை மாணவர்கள் எளிதாக அணுகமுடியும் என்றும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப மாணவர்களை ஊக்குவித்து பாடத்தை கற்பிப்பவர் என்று பொதுவாக மற்றவர்கள் கூறுகின்றனர். கல்வியை மதிப்பெண்களுக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும், மற்றவரை வாழ வைப்பதற்காகவும் தான் கற்பிக்க வேண்டும் என்கின்ற அவருடைய விருப்பத்தை இந்த பகுத்தறிவு பாடத்திட்டம் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற காரணத்தினால் ஒரு தனியார் பள்ளிக்கு வேலைக்கு செல்ல இருந்த அவர் இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் ஆசிரியராக இணைந்துவிட்டார். அவர் ஒரு பாட கருத்தினை தெளிவாக அவரால் எந்த மாணவர்களுக்கும் விளக்க முடியும் என்பதை தன் வலிமையாக கருதுகின்றார். கைவினைப் பணிகள் மற்றும் தையல் வேலை அவருடைய இதர திறன்கள்; பொழுதுபோக்காக தமிழ் நாவல்களையும் வாசிப்பார்.
R. Rama
BA (English)
CT Tutor | Thinking Notes
R.ரமா இவர் பள்ளி பருவத்திலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப் பட்டிருந்தார். ஆனால் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் நடப்பது போல் அவரும் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தை பார்த்துக் கொள்ள வேண்டிய காரணத்தினால் எந்த வேலைக்கும் போகாமல் இருந்தார். இந்த பகுத்தாராய்வு பாட ஆராய்ச்சியின் வாயிலாக ஆசிரியராக அவருக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக உணர்கின்றார். இளங்கலையில் ஆங்கிலம் (B.A English) படித்திருக்கும் இவர், இந்த வேலையில் சேர காரணம், இளம் பருவத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் தற்போது அதையும் விட பல மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை பெருமையாக நினைக்கின்றார். படம் பார்ப்பது, FM-ல் பாடல் கேட்பது இவருடைய பொழுதுபோக்குகள்.
J. Udhayalakshmi
MA (Tamil)
CT Tutor | Thinking Notes
J.உதயலெட்சுமி, ஒரு முதுகலை பட்டதாரி (M.A Tamil). இவர் தான் பகுத்தறிவு பாட ஆசிரியரானது தற்செயலாக நிகழ்ந்தது என்று கூறுகின்றார்; ஆசிரியராக வேண்டும் என்று அவர் எப்போதும் நினைத்தது இல்லை. ஆனாலும் எப்போதும் புதிதாக எதையாவது கற்க வேண்டும் என்ற அவரின் ஆர்வம் அவரை இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் ஆசிரியராக சேர்வதற்கு உந்துதலாக இருந்தது. இப்போது இந்த ஆசிரியர் பணி மிகவும் பிடித்திருப்பதாக கூறுகின்றார். அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் தினசரி புதிது புதிதாக கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்பதாகவும், அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் முயற்ச்சியில் அவரும் புதிது புதிதாக கற்றுக்கொள்வதாகவும் கூறுகின்றார். நாணயங்கள் சேகரிப்பது மற்றும் சிறுகதைகள் வாசிப்பது இவரின் பொழுதுபோக்குகள்.
K.M. Almajitha
MA (Tamil)
CT Tutor | Thinking Notes
K.M. அல்மாஜிதா, இவர் சிறு வயதுமுதலே பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறார். அவருடைய ஆசை பகுத்தறிவு பாட ஆராய்ச்சியின் வாயிலாக பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழில் முதுகலை பட்டம் (M.A Tamil) பெற்றவர். இந்த வேலையை விரும்பியதற்கு காரணம், இது அவருக்கு மற்றவர்கள் மத்தியில் மதிப்பை பெற்றுத்தரக் கூடியதாகவும், அவருடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதாலும், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை மிகவும் விரும்புவதாலும் தான். மாணவர்கள் தாம் கற்றுக்கொடுக்கும் பாடத்தை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்றார்கள் என்று தெரியும் போது பெருமிதம் அடைவதாக கூறுகின்றார்.
P. Udaya
B.Sc (Zoology)
CT Tutor
P. உதயா, இவர் ஒரு இளங்கலையில் விலங்கியல் (B.Sc Zoology) பட்டதாரி. அவர் "ஒரு செயலை முதலில் கற்றுத் தருபவரை யாரும் வாழ்நாளில் எளிதில் மறப்பதில்லை. அப்படி ஒரு குழந்தைக்காவது ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன்" என்று கூறுகின்றார். குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டியாகவும் ஒரு நல்ல உந்துதலாகவும் இருக்க வேண்டும் என்று அன்றாடம் முயற்சிக்கும் அவர் எப்பொழுதும் நேர்மையாகவும் பொறுமையாகவும் இருப்பது ஒரு ஆசிரியரின் பலம் என்றும் கருதுகின்றார். வீட்டு தோட்டப் பராமரிப்பு மற்றும் சமையல் செய்வது இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள்.
Sameera Begum
B.Sc, B.Ed
CT Tutor | Thinking Notes
இவர் படித்த பள்ளியில் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஆசிரியர் ஆக வேண்டும் ஆசைப்பட்டார். காரணம், அவருக்கு கற்பித்த ஒரு ஆசிரியரின் கற்பிக்கும் திறனை பார்த்து அவரைப் போல நானும் ஆசிரியராகி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்; அதற்காக இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சியும் (B.Sc B.Ed) முடித்தார். பின் தன் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் அறிவுரையின் பேரில் இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் ஆசிரியராக சேர்ந்தார். இவர் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் முன்பு பாடத்தினை தான் நன்றாக புரிந்துகொண்டு மாணவர்களுக்கு நடத்த முற்படுவதும், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கேட்க்கும்படியாக பாடம் நடத்துவதும் இவருடைய தனித்த அடையாளம். கவிதை எழுதுவது, வண்ணம் தீட்டுவது மற்றும் கைவினைப் பொருட்கள் வடிப்பது போன்றவற்றில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்.
Uma Maheshwari
CT Tutor
Profile coming soon
Pavithra
CT Tutor
Profile coming soon
Agnes Kiruba
CT Tutor
Profile coming soon
Esakkiammal
CT Tutor
Profile coming soon
Subathra
CT Tutor
Profile coming soon
The programme involved 12 tutors in total. One further profile will be added.
Government partner
Tamil Nadu School Education Department
🏫
Tamil Nadu School Education Department
Government Partner
The project was conducted with the knowledge and permission of the Tamil Nadu School Education Department at each stage of implementation. The department granted access to government and government-aided schools in the study area. Findings will be shared with the department through a pre-publication workshop before the report is released.
Funder
Our Supporter
Phase 1 Funder
An independent individual philanthropist
Phase 1 of the Tamil Nadu Critical Thinking Curriculum was funded entirely by an independent individual philanthropist. India Institute has no institutional affiliation with any political or corporate entity. The funder had no role in the design, execution, or analysis of the research, and has not seen the findings before publication.